< Back
தேசிய செய்திகள்
ஆந்திராவில் கண்டெய்னர் லாரியுடன் மினி லாரி மோதி விபத்து - 6 பேர் உயிரிழப்பு
தேசிய செய்திகள்

ஆந்திராவில் கண்டெய்னர் லாரியுடன் மினி லாரி மோதி விபத்து - 6 பேர் உயிரிழப்பு

தினத்தந்தி
|
14 Jun 2024 9:35 PM IST

ஆந்திராவில் கண்டெய்னர் லாரியுடன் மினி லாரி மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

அமராவதி,

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள சீதானப்பள்ளி கிராமம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த மினி லாரி ஒன்று மற்றொரு வாகனத்தை முந்திச்செல்ல முயன்றபோது எதிரே வந்த கண்டெய்னர் லாரியுடன் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இரண்டு லாரிகளின் ஓட்டுநர்கள் மற்றும் மினி லாரியில் பயணம் செய்தவர்கள் என மொத்தம் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு ஆந்திர மாநில அரசு ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்