< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு 'சிறுதானிய பிஸ்கட்' - முதல்-மந்திரி ரங்கசாமி அறிவிப்பு
|15 Feb 2024 8:27 PM IST
பள்ளி மாணவர்களுக்கு இனி வாரத்தில் 3 நாட்கள் முட்டை வழங்கப்படும் என முதல்-மந்திரி ரங்கசாமி அறிவித்தார்.
புதுச்சேரி,
புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு 'சிறுதானியச் சிற்றுண்டி' வழங்கும் திட்டத்தை புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி இன்று தொடங்கி வைத்தார். இதன் தொடக்க விழாவின்போது மாணவர்களுக்கு சிறுதானியங்கள் அடங்கிய பிஸ்கட்டை அவர் வழங்கினார்.
தொடர்ந்து விழாவில் பேசிய ரங்கசாமி, பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் 2 நாட்கள் மாலையில் திணை, கேழ்வரகு, சோளம், கம்பு ஆகிய சிறுதானியங்கள் அடங்கிய பிஸ்கட் மற்றும் மிட்டாய்கள் வழங்கப்படும் என்றும், வாரத்தில் 2 நாட்கள் வழங்கப்பட்ட முட்டை இனி 3 நாட்கள் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.