< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
'அக்னிவீர்' திட்டத்தில் ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு - பெங்களூருவில் வருகிற 1-ந் தேதி நடக்கிறது
|29 Oct 2022 12:15 AM IST
‘அக்னிவீர்’ திட்டத்தில் ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு பணி பெங்களூருவில் வருகிற 1-ந் தேதி நடக்கிறது.
பெங்களூரு:
'அக்னிவீர்' திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு (ஜெனரல் டூட்டி) ஆள்சேர்ப்பு பணி வருகிற 1-ந்தேதி பெங்களூரு தெற்கு மண்டலத்தில் உள்ள நாகசெட்டிஹள்ளியில் நடக்கிறது. அங்குள்ள ராணுவ வினியோக கழக அலுவலக வளாகத்தில் 4-வது நுழைவு வாயில் பகுதியில் நடக்கிறது. அங்கு ராணுவ பெண் போலீஸ் பணிக்கு பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதனால் தகுதி வாய்ந்த பெண்கள் மேலே குறிப்பிட்டுள்ள மையத்திற்கு நேரடியாக வர வேண்டும் என்று பெங்களூருவில் உள்ள ராணுவத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.