< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ராஜஸ்தானில் ரிக்டர் 3.9 அளவில் லேசான நிலநடுக்கம்
|9 Jun 2024 7:11 AM IST
ராஜஸ்தானில் ரிக்டர் 3.9 அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டதில் நேற்று இரவு 11.47 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக பதிவாகி இருப்பதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் மையம் தரைமட்டத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.