< Back
தேசிய செய்திகள்
குஜராத்தில் ரிக்டர் 3.4 அளவில் லேசான நிலநடுக்கம்
தேசிய செய்திகள்

குஜராத்தில் ரிக்டர் 3.4 அளவில் லேசான நிலநடுக்கம்

தினத்தந்தி
|
20 May 2024 5:39 PM IST

குஜராத்தில் இன்று ரிக்டர் 3.4 அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

காந்திநகர்,

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் இன்று காலை 10.36 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவானதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் மையமானது தரைமட்டத்தில் இருந்து 4.1 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக கட்ச் மாவட்டத்தில் உயிர்சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குஜராத் மாநிலம் பொதுவாகவே நிலநடுக்கத்திற்கான அபாயம் அதிகமாக உள்ள பகுதியாக பார்க்கப்படுகிறது. குஜராத் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 200 ஆண்டுகளில் குஜராத் மாநிலம் 9 பெரிய நிலநடுக்கங்களை சந்தித்துள்ளது. கடந்த 2001-ம் ஆண்டு கட்ச் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலநடுக்கமானது, 200 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்ட 3-வது மிகப்பெரிய நிலநடுக்கமாக பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்