< Back
தேசிய செய்திகள்
இமாசல பிரதேசத்தில் ரிக்டர் 3.3 அளவில் லேசான நிலநடுக்கம்
தேசிய செய்திகள்

இமாசல பிரதேசத்தில் ரிக்டர் 3.3 அளவில் லேசான நிலநடுக்கம்

தினத்தந்தி
|
9 Aug 2024 2:46 PM IST

இமாசல பிரதேசத்தில் ரிக்டர் 3.3 அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

சிம்லா,

இமாசல பிரதேசத்தில் உள்ள மண்டி மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று காலை 9.53 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவாகி இருந்ததாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் மையமானது தரைமட்டத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்போ அல்லது பொருட்சேதமோ ஏற்படவில்லை.

மண்டி மாவட்டத்தில் உள்ள தர்யாம்பிலி என்ற பகுதியில் நிலநடுக்கத்தின் தாக்கம் அதிகமாக உணரப்பட்டுள்ளது. இந்த பகுதியானது 4-ம் நில அதிர்வு மண்டலத்தில் அமைந்துள்ளதால் இங்கு அதிக அளவில் நிலநடுக்கம் ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்