< Back
தேசிய செய்திகள்
ஜம்மு- காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்

கோப்புப்படம் 

தேசிய செய்திகள்

ஜம்மு- காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்

தினத்தந்தி
|
8 Sept 2022 12:30 PM IST

ஜம்மு- காஷ்மீரில் 3.5 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள ரேசாய் மாவட்டம் கத்ரா பகுதியில் காலை 7.52 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 3.5 ஆக பதிவாகி இருந்தது.

இந்த நிலநடுக்கத்தில் உயிர் சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை. சில இடங்களில் வீடுகள் லேசான அதிர்வு ஏற்பட்டது. உடனடியாக மக்கள் வீட்டைவிட்டு வெளியேறினர்.

கடந்த மாதத்தில் ஜம்மு மண்டலத்தில் உள்ள தோடா, ரேசாய், கிஸ்ட்வா, உத்தம்பூர் மாவட்டங்களில் 13 முறை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்