< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
அருணாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம் - ரிக்டர் 3.8 ஆக பதிவு
|23 Nov 2022 8:32 AM IST
இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 3.8 என்ற அளவில் பதிவாகியுள்ளது.
பாசர்,
அருணாச்சல பிரதேச மாநிலம் பாசர் நகரில் இன்று அதிகாலை 7.00 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 3.8 என்ற அளவில் பதிவாகியுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பாசர் நகரத்தில் இருந்து 58 கி.மீ. வட-மேற்கில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.