< Back
தேசிய செய்திகள்

தேசிய செய்திகள்
பீகார் சட்டசபையில் 'மைக்' உடைப்பு: பா.ஜனதா எம்.எல்.ஏ. இடைநீக்கம்

15 March 2023 4:02 AM IST
ஒரு கட்டத்தில் அவர் அவையில் இருந்த ‘மைக்’ ஒன்றையும் உடைத்ததாக தெரிகிறது.
பாட்னா,
பீகாரில் சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நேற்று சட்டசபை கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது பா.ஜனதா எம்.எல்.ஏ. லகேந்திர குமார் ராவ்சன் கேள்வி ஒன்றை எழுப்ப முயன்றார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதனால் அதிருப்தி அடைந்த அவர் அவையில் அமளியில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் அவர் அவையில் இருந்த 'மைக்' ஒன்றையும் உடைத்ததாக தெரிகிறது. இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து அவர் 2 நாட்களுக்கு அவை நடவடிக்கைகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இது அவையில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நடவடிக்கையை கண்டித்து, பா.ஜனதா உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.