< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஸ்ரீநகரில் பயங்கரவாதிகளால் பஞ்சாப் தொழிலாளி ஒருவர் சுட்டுக் கொலை
|8 Feb 2024 4:14 AM IST
பஞ்சாப் புலம்பெயர்ந்த தொழிலாளி ஸ்ரீநகரில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜம்மு காஷ்மீர்,
ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் நேற்று பயங்கரவாதிகளால் ஒரு பஞ்சாப் புலம்பெயர்ந்த தொழிலாளி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.
பலியான அம்ரித்பால் சிங், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் வசிப்பவர். அம்ரித்பால் சிங் ஒரு நடைபாதை வியாபாரி என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்த நபர் ரோகித் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஸ்ரீநகரில் உள்ள ஷாஹீத் கஞ்ச் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்ததாகவும், தற்போது அப்பகுதி சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாகவும், தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டுபிடிக்க தேடுதல் வேட்டை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். காயமடைந்த நபருக்கு தற்போது மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.