< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மிக்-21 போர் விமானம் விபத்து - விமானப்படை வீரர்கள் இருவர் உயிரிழப்பு
|29 July 2022 1:00 AM IST
ராஜஸ்தானில் போர் விமானம் விபத்துக்குள்ளானதில் விமானத்தில் இருந்த 2 விமானிகளும் உயிரிழந்தனர்.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் உள்ள உதர்லாய் விமான தளத்தில் இருந்து, நேற்று இரவு 9 மணியளவில் இந்திய விமானப்படையின் மிக்-21 போர் விமானம் பயிற்சிக்காக எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது விமானம் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 2 விமானிகளும் உயிரிழந்தனர். விமானிகள் இருவரின் உயிரிழப்புக்கு இந்திய விமானப்படை இரங்கல் தெரிவித்துள்ளது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.