< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
டெல்லி யமுனா விகார் பகுதியில் துப்பாக்கிச்சூடு
|18 Feb 2024 3:55 AM IST
இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், திடீரென அங்கிருந்த ஒரு வீட்டை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
புதுடெல்லி,
டெல்லியில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி யமுனா விகார் பகுதியில், கடந்த 15-ம் தேதி இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், திடீரென அங்கிருந்த ஒரு வீட்டை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், இதுகுறித்த புகார் மீது விசாரணை நடத்தி வருவதாகவும் டெல்லி போலீசார் தெரிவித்தனர். இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்த சி.சி.டி.வி. காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.