< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பிரதமர் மோடியின் தாயார் நினைவாக இணையதளம் தொடக்கம்
|12 March 2023 4:45 AM IST
பிரதமரின் அதிகாரபூர்வ இணையதளத்தில் பிரதமர் மோடியின் தாயார் நினைவாக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
பிரதமர் மோடியின் அதிகாரபூர்வ இணையதளத்தில், மோடியின் தாயார் ஹீராபென் நினைவாக 'மா' என்ற 'மைக்ரோ'தளம்' தொடங்கப்பட்டுள்ளது. ஹீராபென், கடந்த ஆண்டு டிசம்பர் 30-ந் தேதி மரணம் அடைந்தார். அவரது நினைவுகள், பொதுத்தளத்தில் வாழ்க்கை, தேசம் இரங்கல், உலகம் இரங்கல், தாய்மையை கொண்டாடுதல் என 4 பிரிவுகளாக இடம்பெற்றுள்ளது.
அவற்றில், ஹீராபென்னின் புகைப்படங்கள், அவரைப்பற்றி பிரதமர் மோடி அளித்த பேட்டிகள், இந்திய தலைவர்களின் இரங்கல் அறிக்கைகள், வெளிநாட்டு தலைவர்களின் இரங்கல்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
பிரதமரின் அதிகாரபூர்வ செயலியான 'நரேந்திர மோடி' செயலியிலும் இந்த 'மைக்ரோ தளம்' தொடங்கப்பட்டுள்ளது.