< Back
தேசிய செய்திகள்
தெற்கு ஆந்திராவில் கரையை கடக்கத்தொடங்கிய மிக்ஜம் புயல்...!
தேசிய செய்திகள்

தெற்கு ஆந்திராவில் கரையை கடக்கத்தொடங்கிய மிக்ஜம் புயல்...!

தினத்தந்தி
|
5 Dec 2023 2:47 PM IST

மிக்ஜம் புயல் தெற்கு ஆந்திரா கடல் பகுதியில் கரையை கடக்கத்தொடங்கியது.

அமராவதி,

வங்கக்கடலில் கடந்த 27-ந்தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறியது. மிக்ஜம் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயலால் சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முன் தினம் முதல் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.

சென்னைக்கு கிழக்கு - வடகிழக்கே வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த மிக்ஜம் புயல், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக மாறி மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளை ஒட்டி வடக்கு திசை நோக்கி நகர்ந்தது.

இந்நிலையில், மிக்ஜம் புயல் தற்போது தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதியை ஒட்டிய பாபட்லா பகுதியில் கரையை கடக்கத்தொடங்கியுள்ளது. புயல் கரையை கடக்கக்கூடிய நேரத்தில் மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்