< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பெங்களூருவில் டிரைவர்கள் இல்லாமல் விரைவில் மெட்ரோ ரெயில்கள் ஓடும்
|21 Jun 2022 3:21 AM IST
பெங்களூருவில் டிரைவர்கள் இல்லாமல் விரைவில் மெட்ரோ ரெயில்கள் ஓடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு:
பெங்களூருவில் பையப்பனஹள்ளி முதல் கெங்கேரி வரையிலும், நாகசந்திராவில் இருந்து அஞ்சனாபுரா வரையிலும் 56 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில்கள் ஓடுகின்றன. இதில் தினமும் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணித்து வருகிறார்கள். தற்போது மெட்ரோ ரெயில்களை டிரைவர்கள் இயக்கி வருகிறார்கள். டெல்லியில் டிரைவர்கள் இல்லாமல் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
அதே போல் பெங்களூருவிலும் விரைவில் டிரைவர்கள் இல்லாமல் மெட்ரோ ரெயில்களை இயக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். மெட்ரோ ரெயில்கள் இயக்கத்தை கட்டுப்பாட்டு அறையில் இருந்து தொழில்நுட்பம் மூலம் இயக்கப்படும். இதனால் அவ்வப்போது சிறிய அளவில் குழப்பங்கள் ஏற்படுவது தடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.