< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
அசாமில் திடீர் ஆலங்கட்டி மழை: வீடுகள், விளைநிலங்கள் சேதம்
|28 Dec 2022 6:14 AM IST
டிசம்பர் மாதத்தில் அசாமில் ஆலங்கட்டி மழை பெய்வது அரிதான ஒன்று என வானிலை ஆராய்ச்சியாளர்கள்தெரிவித்தனர்.
கவுகாத்தி,
அசாம் மாநிலம் திப்ருகர், சிவசாகர், தின்சுகிகா உள்பட பல மாவட்டங்களில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்தது. 4,500 வீடுகள் சேதமடைந்தன. மேலும் பள்ளி கட்டிடங்கள், விளை நிலங்கள் சேதமடைந்தன. வீடுகளை இழந்த பொதுமக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
டிசம்பர் மாதத்தில் அசாமில் ஆலங்கட்டி மழை பெய்வது அரிதான ஒன்று என வானிலை ஆராய்ச்சியாளர்கள்தெரிவித்தனர். மேலும் வரும் நாட்களுக்கு மழைக்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.