< Back
தேசிய செய்திகள்
சமூகத்தில் ஆண்களுக்கு சமமான இடத்தை பெண்களுக்கு வழங்குங்கள்- ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

Image Courtesy: PTI 

தேசிய செய்திகள்

சமூகத்தில் ஆண்களுக்கு சமமான இடத்தை பெண்களுக்கு வழங்குங்கள்- ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

தினத்தந்தி
|
18 Aug 2022 8:57 PM IST

பெண்களுக்கு வழிகாட்டுதல் தேவை இல்லை, அவர்கள் ஆண்களை விட திறமையானவர்கள் என மோகன் பகவத் தெரிவித்தார்.

நாக்பூர்,

மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற சங்பரிவாரின் ராஷ்ட்ர சேவிகா சமிதி சார்பில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் ராஷ்திரிய சுவயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத் பங்கேற்று பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

பெண்கள் 'பிரபஞ்சத்தின் தாய் என்று கருதப்படுகிறார்கள். ஆனால் வீட்டில் அவர்கள் அடிமைகளாக நடத்தப்படுகிறார்கள். பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது வீட்டிலிருந்து தொடங்ப்பட்டு, சமூகத்திலும் அவர்களுக்கு உரிய இடத்தை வழங்க வேண்டும்.

ஆண்கள் பெண்களை மேம்படுத்த முயற்சிக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் பெண்கள் ஆண்களை விட திறமையானவர்கள், அதனால்தான் அவர்களுக்கு எந்த வழிகாட்டுதலும் தேவையில்லை. அவர்களை வழிநடத்துவது ஆண்களுக்கு எட்டாத ஒன்று.

எனவே, பெண்கள் தங்கள் பாதையைத் தேர்ந்தெடுக்கட்டும். பெண்கள் நீண்ட காலமாக அடைத்து வைக்கப்பட்டு இருந்தனர். இப்போது அவர்கள் அதிகாரம் பெறட்டும்

ஒருபுறம், பெண்களை ஆண்களுக்கு சமமாக கருதுகிறோம், மறுபுறம் அவர்களை அடிமைகளாக நடத்துகிறோம். இந்த மனநிலையை விட்டுவிட்டு அவளுக்கு சமூகத்தில் சமமான இடத்தை வழங்குங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்