< Back
தேசிய செய்திகள்
மேகதாது அணை வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால் அதுபற்றி பேச முடியாது; டி.கே.சிவக்குமார் பேட்டி
தேசிய செய்திகள்

மேகதாது அணை வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால் அதுபற்றி பேச முடியாது; டி.கே.சிவக்குமார் பேட்டி

தினத்தந்தி
|
28 July 2023 2:38 AM IST

மேகதாது அணை வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால் அதுபற்றி பேச முடியாது என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.

பெங்களூரு:

பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டம் முடிவடைந்து வெளியே வந்த நீர்ப்பாசனத்துறையை தன்வசம் வைத்துள்ள துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரிடம் மேகதாது அணை கட்டும் பணிக்காக நிலத்தை அளவீடு செய்வதற்காகவும், கையகப்படுத்துவதற்காகவும் 29 துணை வனத்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர், 'மேகதாது அணை விவகாரம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால் அதுபற்றி பேச முடியாது. மேகதாது அணை விவகாரத்தில் சட்ட நடவடிக்கை தொடரும்' என்றார்.

மேலும் டி.கே.சிவக்குமார் கூறுகையில், 'எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் யாருக்கும் அதிருப்தி இல்லை. யாரும், யார் மீதும் புகார் அளிக்கவில்லை. இந்த கூட்டத்தில் உத்தரவாத திட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. நாங்கள் வாக்குறுதி அளித்த 5 உத்தரவாத திட்டங்களில் 4 திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். உத்தரவாத திட்டங்களை மாவட்ட அளவில் செயல்படுத்த மந்திரிகள், எம்.எல்.ஏ.க்களுக்கு உத்தரவிடப்பட்டது' என்றார்.

மேலும் செய்திகள்