< Back
தேசிய செய்திகள்
சினிமாவை மிஞ்சும் கொடூரம்...! காதலியை 35 துண்டுகளாக வெட்டி நாய்களுக்கு வீசிய காதலன்...!
தேசிய செய்திகள்

சினிமாவை மிஞ்சும் கொடூரம்...! காதலியை 35 துண்டுகளாக வெட்டி நாய்களுக்கு வீசிய காதலன்...!

தினத்தந்தி
|
15 Nov 2022 4:06 PM IST

காதலியை 35 துண்டுகளாக வெட்டி நாய்களுக்கு வீசிய காதலன்...! பிரிட்ஜில் பிணம்; மற்றொரு காதலியுடன் உல்லாசம்

புதுடெல்லி:

டெல்லியில் காதலியை கொன்று உடலை 35 துண்டுகளாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் 18 நாட்கள் வைத்திருந்து காட்டில் வீசிய 'குரூர' வாலிபரை 6 மாதங்களுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர்.

இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள மாணிக்பூர் என்ற இடத்தைச் சேர்ந்த விகாஷ் என்பவரின் மகள் ஷ்ரத்தா (வயது 26). மும்பையில் உள்ள ஒரு கால் சென்டரில் இவர் வேலை பார்த்து வந்தார். அப்போது உடன் வேலை பார்த்த அப்தாப் அமீன் பூனாவாலா என்ற வாலிபருடன் அவருக்கு காதல் மலர்ந்தது. அந்த காதலை ஷ்ரத்தாவின் பெற்றோர் எதிர்த்தனர்.

அதையடுத்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் காதல் ஜோடி டெல்லிக்கு இடம் மாறியது. அங்கு மெக்ருலி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடியேறினர். இதற்கிடையே மும்பையில் உள்ள பெற்றோருடனும் ஷ்ரத்தா தொடர்ந்து பேசி வந்தார்.

இந்த நிலையில் கடந்த மே மாதத்தில் இருந்து ஷ்ரத்தாவை அவருடைய பெற்றோரால் தொடர்புகொள்ள முடியவில்லை. அதனால் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அதையடுத்து ஷ்ரத்தாவின் தந்தை, மராட்டிய மாநிலம் மாணிக்பூர் போலீசில் புகார் அளித்தார். மராட்டிய போலீசார் அங்கிருந்து டெல்லியில் அப்தாப்பை தொடர்புகொண்டு பேசினார்கள். கடந்த 2 மாதங்களாக அவர் போலீசுக்கு போக்குகாட்டி வந்தார்.

இந்த நிலையில் ஷ்ரத்தாவின் தந்தை கடந்த வாரம் டெல்லி வந்தார். அங்கு ஷ்ரத்தா தங்கியிருந்த வீட்டுக்கு சென்றபோது அது பூட்டிக்கிடந்தது. அதைத்தொடர்ந்து அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் ஷ்ரத்தாவின் காதலன் அப்தாப்பை பிடித்து விசாரித்தனர்.

அதில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. கடந்த மே மாதம் 18-ந்தேதி, ஷ்ரத்தா தன்னை திருமணம் செய்யுமாறு தொந்தரவு செய்ததால் ஆத்திரத்தில் அவரை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டதாக அப்தாப் தெரிவித்தார்.

மேலும் ஷ்ரத்தாவின் உடலை 35 துண்டுகளாக வெட்டி அதை குளிர்சாதன பெட்டியில் அப்தாப் வைத்துள்ளார். இதற்காக ஒரு புதிய குளிர்சாதன பெட்டியை அவர் வாங்கியுள்ளார். அதில் உடல் பாகங்களை வைத்திருந்த அவர், அவற்றை பாலிதீன் பைகளில் எடுத்துச் சென்று அருகில் உள்ள காட்டுப்பகுதியில் நள்ளிரவு நேரத்தில் வீசியுள்ளார். 18 நாட்களாக அவர் இவ்வாறு செய்துள்ளார். அதுவரை அக்கம்பக்கத்தினருக்கு துர்வாடை ஏதும் தெரியாமல் இருக்க வீட்டில் ஊதுபத்தி கொளுத்தியுள்ளார். 'ரூம் பிரெஷ்னரையும்' பயன்படுத்தியுள்ளார். ஆனால் 6 மாதங்களுக்கு பிறகு போலீஸ் பிடியில் சிக்கிவிட்டார்.

தற்போது போலீசாருக்கு சில உடல் பாகங்களே கிடைத்துள்ளன.சிலவற்ரை தெரு நாய்கள் தின்று இருக்கலாம். மற்ற பாகங்களையும், வெட்டுவதற்கு பயன்படுத்திய கத்தியையும் தேடிவருகின்றனர். அப்தாப்பை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கின்றனர்.

இந்த கொடூர சம்பவம் தலைநகர் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலையை கையாள அப்தாப், 'டெக்ஸ்டர்' என்கிற ஆங்கில 'கிரைம்' படத்தையும், பல்வேறு வெப் சீரியல்களையும் பார்த்துள்ளார். கொலை செய்தபிறகு அவர் 'கூலாக' ஆன்லைன் உணவு வினியோக நிறுவனத்தில் ஆர்டர் செய்து உணவு வாங்கி சாப்பிட்ட தகவலும் வெளியாகியிருக்கிறது.

இந்த சம்பவம் குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள டெல்லி மகளிர் ஆணைய தலைவி சுவாதி மாலிவால், இவ்வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து போலீசாரிடம் விளக்கம் கேட்டு தாமாக முன்வந்து நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

டெல்லி மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது ஷ்ரத்தா என்ற இளம்பெண்ணின் படுகொலை.

ஷ்ரத்தாவை கொன்ற பிறகு உடலை வெட்டிய அதே அறையில் அப்தாப் அமீன் பூனாவாலா தினமும் தூங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். ப்ரிட்ஜில் வைத்துவிட்டு முகத்தை தினமும் பார்த்து வந்துள்ளார். உடல் உறுப்புகளை அப்புறப்படுத்திய பிறகு அப்தாப் பிரிட்ஜ்ஜை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்துள்ளார். துர்நாற்றம் வராமல் இருப்பதற்காக ஊதுபத்தி பயன்படுத்தியுள்ளார்.

ஷ்ரத்தாவை அப்தாப் 35 துண்டுகளாக வெட்டிய போது வீடு முழுவதும் ரத்தம் சிதறியது. தரை முழுக்க ரத்த ஆறாக ஓடியது. அந்த ரத்தக் கறைகளை எப்படி துடைத்து சுத்தம் செய்வது என்று அப்தாப்புக்கு தெரியவில்லை.

இதனால் கூகுளில் அவன் இதற்கு விடை தேடினான். தரையில் படிந்த ரத்தக் கறைகளை சுவடு தெரியாமல் எப்படி சுத்தம் செய்வது என்று அவன் கூகுளில் ஆய்வு செய்துள்ளான்.

அப்போது சில ரசாயன பொருட்களை பயன்படுத்தினால் ரத்த கறைகளை முழுமையாக நீக்கலாம் என்று அவனுக்கு தெரியவந்துள்ளது. அதன்படி அவன் அந்த ரசாயான பொருட்களை கடைகளில் இருந்து வாங்கி வந்து வீட்டை சுத்தம் செய்திருக்கிறான். ரத்தக் கறைகள் படிந்த சட்டையையும் அவன் கூகுளில் ஆராய்ச்சி செய்துதான் சுத்தம் செய்திருக்கிறான்.

அதே வீட்டிலேயே தங்கி வந்துள்ளார். ஷ்ரத்தாவின் உடல் உறுப்புகளை வைத்திருந்த அதே பிரிட்ஜில் தனது உணவையும் வைத்து சாப்பிட்டு வந்துள்ளார். கொலை நடந்த சில நாட்களுக்குப் பின்னர், வேறொரு பெண்ணுடன் டேட்டிங் செய்துள்ளர். ஷ்ரத்தாவின் உடல் உறுப்புகள் பிரிட்ஜில் இருந்த நிலையில், அந்தப் பெண்ணையும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

தற்போது டெல்லி சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் அப்தாப் அமீன் பூனாவாலாவுக்கு பயங்கர பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மற்றொரு கைதியுடன் அடைக்கப்பட்டு இருக்கிறார். சிறை அறைக்கு வெளியே ஒரு போலீஸ்காரர் எப்போதும் அமர்ந்திருந்து பாதுகாப்பு அளித்து வருகிறார். போலீஸ் அதிகாரிகளும் வெளியே நடமாடி பாதுகாப்பை உறுதி செய்து வருகின்றனர். இந்த கொலை லவ் ஜிகாத் தொடர்பு உடையதா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்