< Back
தேசிய செய்திகள்
சிவனுக்கு அபிஷேகம் செய்த மெகபூபா முப்தி... விமர்சனம் செய்த பாஜகவுக்கு பதிலடி கொடுத்த முப்தி
தேசிய செய்திகள்

சிவனுக்கு அபிஷேகம் செய்த மெகபூபா முப்தி... விமர்சனம் செய்த பாஜகவுக்கு பதிலடி கொடுத்த முப்தி

தினத்தந்தி
|
17 March 2023 10:22 AM IST

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல் முதல் மந்திரி மெகபூபா முப்தி, சிவன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

ஜம்மு,

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் சிவன் கோவிலுக்கு சென்ற முன்னாள் முதல் மந்திரி மெகபூபா முப்தி, சாமி தரிசனம் செய்தார். கருவறைக்குள் சென்றவர் சிவனுக்கு அபிஷேகம் செய்தார்.

இந்த காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவிய நிலையில், இந்து மற்றும் இஸ்லாமிய மதகுருமார்கள் தரப்பில் விமர்சனம் செய்யப்பட்டது. மறுபுறம் ஆட்சியிலிருந்தபோது அமர்நாத் வாரியத்திற்கு நிலம் ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்தவர் மெகபூபா எனக் குற்றம் சாட்டிய, பாஜக செய்தி தொடர்பாள ரன்பீர் சிங் பதானியா, மெகபூபா இப்போது கோவிலுக்கு சென்றிருப்பது எல்லாம் அரசியல் நாடகம் என விமர்சனம் செய்தார்.

இந்த விமர்சனங்களுக்கு பதில் அளித்த மெகபூபா, தனது மதம் குறித்து தனக்கு நன்றாக தெரியும், தனக்கு விருப்பம் இருக்கும் இடத்திற்கு செல்வது தனது உரிமை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்