< Back
தேசிய செய்திகள்
பொதுவெளியில் பெண்ணை கட்டையால் தாக்கிய கும்பல் - அதிர்ச்சி சம்பவம்
தேசிய செய்திகள்

பொதுவெளியில் பெண்ணை கட்டையால் தாக்கிய கும்பல் - அதிர்ச்சி சம்பவம்

தினத்தந்தி
|
27 Jun 2024 9:52 AM IST

திருமணத்திற்கு புறம்பான உறவில் ஈடுபட்டதாக பெண்ணை பொதுவெளியில் கும்பல் ஒன்று கட்டையால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேகாலயா,

மேகாலயாவில் திருமணத்திற்கு புறம்பான உறவில் ஈடுபட்டதாக கூறி பெண்ணை பொதுவெளியில் வைத்து கும்பல் ஒன்று கட்டையால் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேகாலயாவின் மேற்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள தாதெங்க்ரே பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

பெண் ஒருவர் பொதுவெளியில் வைத்து கொடூரமாக தாக்கப்படுகிறார். இதனை அங்கு கூடியிருந்த பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர். இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் 5 பேரை கைது செய்துள்ளனர்.

இதற்கிடையே, பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான மேகாலயா சட்டமன்றக் குழுவின் தலைவரான சாண்டா மேரி ஷைலா, போலீசாரிடம் இந்த சம்பவம் தொடர்பான அறிக்கையை கேட்டுள்ளார். மேலும் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் விவகாரத்தில் விழிப்புடன் இருக்க மேகாலயாவின் 12 மாவட்டங்களை சேர்ந்த காவல்துறை அதிகாரிகளை வலியுறுத்துவதாக தெரிவித்தார்.

மேலும் செய்திகள்