< Back
தேசிய செய்திகள்
மேகாலயா, நாகாலாந்து சட்டசபை தேர்தல் - மதியம் 1 மணி நிலவரம்
தேசிய செய்திகள்

மேகாலயா, நாகாலாந்து சட்டசபை தேர்தல் - மதியம் 1 மணி நிலவரம்

தினத்தந்தி
|
27 Feb 2023 2:12 PM IST

மேகாலயா, நாகாலாந்தில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சில்லாங்,

மேகாலயா, நாகாலாந்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். மூத்த வாக்காளர்களும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது.

இந்த நிலையில், மேகாலயா, நாகாலாந்தில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், மதியம் 1 மணி நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, நாகாலாந்தில் மதியம் 1 மணி நிலவரப்படி 57.06% வாக்குப்பதிவாகியுள்ளது. மேகாலயாவில் மதியம் 1 மணி நிலவரப்படி 44.73% வாக்குகள் பதிவாகி உள்ளது. வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்