< Back
தேசிய செய்திகள்
சுதந்திர தின விழாவில் பங்கேற்ற மாணவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு
தேசிய செய்திகள்

சுதந்திர தின விழாவில் பங்கேற்ற மாணவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு

தினத்தந்தி
|
16 Aug 2023 12:18 AM IST

சுதந்திர தின விழாவில் பங்கேற்ற மாணவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது.

ஷில்லாங்,

மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் நேற்று சுதந்திர தின கொண்டாட்டம் நடந்தது.

முதல்-மந்திரி கான்ராட் கே. சங்மா மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, உரையாற்றிக் கொண்டிருந்தார்.

அணிவகுப்பில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 200 மாணவர்கள் பங்கு பெற்றனர். அவர்களில் சுமார் 15 மாணவர்களுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது.

இதனால் அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்கள் சோர்வு மற்றும் நீர்ச்சத்து இழப்பால் பாதிக்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தால் சுதந்திர தின கொண்டாட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்