< Back
மாநில செய்திகள்
மேகதாது - நாளை டெல்லி செல்கிறார் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன்
மாநில செய்திகள்

மேகதாது - நாளை டெல்லி செல்கிறார் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன்

தினத்தந்தி
|
3 July 2023 5:37 PM IST

மேகதாது அணை விவகாரம் குறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்திக்க நளை அமைச்சர் துரை முருகன் டெல்லி செல்கிறார்.

சென்னை,

மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தொடர்ந்து முனைப்பு காட்டி வருகிறது. இதற்கு தமிழக அரசும், அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆலோசனையில் ஈடுபட்டார். தமிழ்நாடு அரசு சார்பில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி முடிவெடுக்கலாமா என்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது.

ஆலோசனைக்கு பின் அமைச்சர் துரைமுருகன் டெல்லி சென்று காவிரி மேலாண்மை வாரிய அதிகாரிகளை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகின. மேலும் அவர்களிடம் தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க உள்ளதாகவும் தெரிகிறது.

இந்நிலையில் நாளை டெல்லி செல்லும் அமைச்சர் துரை முருகன் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவதை சந்தித்து மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவிற்க்கு அனுமதி வழங்ககூடாது என வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

மேலும் செய்திகள்