மேகதாது விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டு முடிவெடுக்கும் வரை விவாதம் இல்லை - நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதில்
|மேகதாது விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு முடிவெடுக்கும் வரை விவாதம் இல்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
புதுடெல்லி,
மேகதாது அணை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு முடிவு எடுக்கும் வரை விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதில் சீரான நிலைப்பாட்டை எடுக்க காவிரி மேலாண்மை ஆணையம் முடிவு செய்துள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் கருத்து, மத்திய அரசின் நிலைப்பாடு குறித்தும் இதனை தடுக்க மத்திய அரசின் செயல் திட்டம் என்ன என்றும் திமுக எம்பி வில்சன் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மாநிலங்களவையில் மத்திய நீர்வளத்துறை இணை மந்திரி பிஸ்வேஸ்வர் துடு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
அதில் மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் மீதுள்ள மனுவில் சுப்ரீம் கோர்ட் முடிவு எடுக்கும் வரை விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதில் சீரான நிலைப்பாட்டை எடுக்க காவிரி மேலாண்மை ஆணையம் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.