< Back
தேசிய செய்திகள்
மேகதாது அணை விவகாரம் - நாடாளுமன்றத்தில் வி.சி.க. எம்.பி. எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு பதில்
தேசிய செய்திகள்

மேகதாது அணை விவகாரம் - நாடாளுமன்றத்தில் வி.சி.க. எம்.பி. எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு பதில்

தினத்தந்தி
|
4 Aug 2022 6:41 PM IST

மத்திய சட்ட அமைச்சகத்திடம் ஆலோசனை பெறப்பட்டு காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் வகையில் மத்திய அரசு முடிவு எடுத்துள்ளதா? என்றும், அண்மையில் நடைபெற்ற காவிரி மேலாண்மை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு தொடர்பாக மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்றும் நாடாளுமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.பி.ரவிக்குமார் கேள்வி எழுப்பினார்.

இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய நீர்வளத்துறை இணை மந்திரி பிஷ்வேஷ்வர் துடு, இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற 15-வது காவிரி மேலாண்மை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, மத்திய சட்டத்துறை அமைச்சகத்தின் சட்ட ஆலோசனை பெறப்பட்டு அவை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேகதாது அணை திட்டம் குறித்து ஜூலை 22 ஆம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்திலும் இது விவாத பொருளாக சேர்க்கப்பட்டதாக தெரிவித்துள்ள மத்திய மந்திரி, அந்த கூட்டத்தில் மேகதாது அணை திட்டம் குறித்த விரிவான திட்ட அறிக்கை விவாதிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்