< Back
தேசிய செய்திகள்
மருத்துவக்கல்லூரி பேராசிரியை தற்கொலை: போலீசார் தீவிர விசாரணை

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

மருத்துவக்கல்லூரி பேராசிரியை தற்கொலை: போலீசார் தீவிர விசாரணை

தினத்தந்தி
|
2 April 2024 2:58 AM IST

மருத்துவக்கல்லூரி பேராசிரியை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வயநாடு,

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் கல்பெட்டா அருகே மேப்பாடியில் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பேராசிரியையாக கோழிக்கோடு பகுதியை சேர்ந்த கே.இ. பெலிஸ் நசீர் (வயது 31) என்பவர் பணியாற்றி வந்தார்.

இவர் இந்த மருத்துவக் கல்லூரி துணைப் பேராசிரியர் மட்டுமின்றி மருத்துவர்களுக்கு இடையே ஏற்படும் மன அழுத்தத்தை குறைத்து தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு ஆலோசனை வழங்கும் ஆலோசனை கவுன்சிலில் உறுப்பினராகவும் இருந்து வந்தார்.

நேற்று மதியம் உணவருந்திய பின் ஓய்வு எடுக்க தனது அறைக்கு சென்ற இவர் மாலை வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர், அறைக் கதவை தட்டியும் அவர் கதவை திறக்கவில்லை. தொடர்ந்து ஜன்னல் வழியாக பார்த்த போது இவர் அறைக்குள் உள்ள ஜன்னலில் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி பேராசிரியை எதற்காக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்