< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மின்சாரம் தாக்கி மெக்கானிக் சாவு
|21 Nov 2022 12:15 AM IST
கலபுரகியில் மின்சாரம் தாக்கி மெக்கானிக் உயிரிழந்தார்.
கலபுரகி:
கலபுரகியை சேர்ந்தவர் அமரேஷ் (வயது 34). இவர் பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா தாலுகா மாதநாயக்கனஹள்ளியில் உள்ள தொழிற்சாலையில் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நிறுவனத்தில் வயர்களை இணைக்கும் பணியில் அமரேஷ் ஈடுபட்டு இருந்தார். அப்போது அவரை எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியது.
இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். இந்த நிலையில் தொழிற்சாலை நிர்வாகத்தினர் போதிய உபகரணங்கள் தராததால் தான் மின்சாரம் தாக்கி அமரேஷ் உயிரிழந்து விட்டதாக கூறி தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் சமாதானம் செய்தனர். இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் தொழிற்சாலை நிர்வாகம் மீது மாதநாயக்கனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.