< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பாகிஸ்தானுக்கு தகவல்களை திரட்டி உளவு கூறிய டிரைவர் கைது
|18 Nov 2022 6:49 PM IST
பாகிஸ்தானுக்கு ரகசியமான முறையில் முக்கியமான தகவல்களை அனுப்பியதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் பணிபுரியும் ஓட்டுநர் ஒருவரை, டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுடெல்லி,
புதுடெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பவனில் இருந்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் ஓட்டுநர் ஒருவர் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டார். பூனம் ஷர்மா/பூஜா என்ற பெண்ணாக நடித்த பாகிஸ்தான் நாட்டவர் ஒருவருக்கு பணத்திற்கு பதிலாக முக்கிய தகவல்/ஆவணங்களை ஓட்டுநர் மாற்றிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐயின், ஹனி-டிராப் வலையில் இந்த வாகன ஓட்டுநர் சிக்கியிருந்தார் என்றும் இதையடுத்து பாதுகாப்பு அமைப்புகளின் உதவியுடன் டெல்லி போலீசார் அவரை கைது செய்துள்ளதாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.