< Back
தேசிய செய்திகள்
நாட்டின் பெயரில் உருவாகும் அரசியல் கூட்டணிகளை தடை செய்ய வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டுக்கு மாயாவதி வேண்டுகோள்

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

நாட்டின் பெயரில் உருவாகும் அரசியல் கூட்டணிகளை தடை செய்ய வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டுக்கு மாயாவதி வேண்டுகோள்

தினத்தந்தி
|
7 Sept 2023 2:17 AM IST

நாட்டின் பெயரில் உருவாகும் அரசியல் கூட்டணிகளை தடை செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டுக்கு மாயாவதி வேண்டுகோள் விடுத்தார்.

லக்னோ,

டெல்லியில் ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள வரும் உலகத் தலைவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருந்தளிக்க உள்ளார். இதற்கான அழைப்பிதழில் "பாரத ஜனாதிபதி" என குறிப்பிடப்பட்டுள்ளது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

இந்த நிலையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறியதாவது:-

"பாரதம் மற்றும் இந்தியா" பெயர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் தேவையற்ற அரசியல் நடவடிக்கைகளை சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து பரிசீலித்து, நாட்டின் பெயரில் உருவாகும் அனைத்து அமைப்புகள், கட்சிகள் மற்றும் கூட்டணிகளை தடை செய்ய வேண்டும். எங்கள் கட்சி இந்த சாதிய, வகுப்புவாத மற்றும் முதலாளித்துவ கூட்டணிகளில் இருந்து விலகி இருப்பது முற்றிலும் சரியானது என்று அவர் கூறினார்.

பகுஜன் சமாஜ் கட்சி பா.ஜனதா மற்றும் இந்தியா கூட்டணியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்