< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
'மதசார்பற்ற இந்தியாவிற்கான உங்கள் போராட்டம் தொடரட்டும்' - ராகுல் காந்திக்கு பிரகாஷ் ராஜ் பிறந்தநாள் வாழ்த்து
|19 Jun 2024 11:06 AM IST
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று தனது 54-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு அவருக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் பிரகாஷ் ராஜ், ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "மதசார்பற்ற இந்தியாவிற்கான உங்கள் இடைவிடாத போராட்டமும், பயணமும் தொடர வாழ்த்துகிறேன். உங்களது 'அன்பின் கடை' மேலும் பலம் பெறட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.