< Back
தேசிய செய்திகள்
ஹோலி பண்டிகை புதிய ஆற்றலையும், உற்சாகத்தையும் கொண்டு வரட்டும் - பிரதமர் மோடி வாழ்த்து
தேசிய செய்திகள்

'ஹோலி பண்டிகை புதிய ஆற்றலையும், உற்சாகத்தையும் கொண்டு வரட்டும்' - பிரதமர் மோடி வாழ்த்து

தினத்தந்தி
|
24 March 2024 8:05 PM IST

ஹோலி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

வட மாநிலங்களில் ஹோலி பண்டிகை நாளை(25-ந்தேதி) கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு இன்றைய தினமே பல்வேறு இடங்களில் பொதுமக்கள் வண்ணப் பொடிகளை தூவி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். அதோடு இன்று 'ஹோலிகா தஹன்' என்ற நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது.

இந்த நிலையில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஹோலி பண்டிகையை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நாட்டில் உள்ள எனது குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய ஹோலி நல்வாழ்த்துக்கள். பாசம் மற்றும் நல்லிணக்கத்தின் வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்ட இந்த பாரம்பரிய திருவிழா உங்கள் அனைவரின் வாழ்விலும் புதிய ஆற்றலையும் புதிய உற்சாகத்தையும் கொண்டு வரட்டும்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்