< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பொங்கல் பண்டிகை மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரட்டும்: பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து
|15 Jan 2024 9:57 AM IST
பொங்கல் பண்டிகைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
புதுடெல்லி,
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூகவலைதளத்தில் தெரிவித்து இருப்பதாவது;
"அறுவடையைக் கொண்டாடும் இந்த பண்டிகை புதிய நம்பிக்கைகளையும், புதிய தொடக்கங்களையும் கொண்டு வரட்டும். இது புதிய விருப்பங்களை ஒளிரச் செய்து மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரட்டும்." என அவர் தெரிவித்துள்ளார்.