< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மட்கா சூதாட்டம்; 3 பேர் கைது
|6 Aug 2022 8:54 PM IST
உப்பள்ளியில் மட்கா சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
உப்பள்ளி;
தார்வார் மாவட்டம் உப்பள்ளி டவுன் பழைய உப்பள்ளி எக்கேரி பஸ் நிலையம் அருகே மட்கா சூதாட்டம் நடப்பதாக பழைய உப்பள்ளி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ேசாதனை நடத்தினர்.
அப்போது அந்த பகுதியில் மட்கா சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஆனந்த் நகரை சேர்ந்த மகேஷ் (வயது 22), பீமப்பா (24) மற்றும் மஞ்சுநாத் (22) ஆகியோா் என்பது தெரியவந்தது.
மேலும் அவர்களிடம் இருந்து சூதாட வைத்திருந்த ரூ.6 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.