< Back
தேசிய செய்திகள்
உத்தரபிரதேசத்தில் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த சமூக ஆர்வலர் மரணம்
தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த சமூக ஆர்வலர் மரணம்

தினத்தந்தி
|
14 Jun 2024 10:27 PM IST

4 மாதங்களாக நடந்து வந்த இந்த உண்ணாவிரதத்தால் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது.

மதுரா,

உத்தரபிரதேசத்தின் மதுரா மாவட்டத்தில் ஊரக மேம்பாட்டுத்துறை மற்றும் 100 நாள் வேலைத்திட்டத்தில் ஊழல் நடப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணைக்குழுவில் தேவகி நந்த் சர்மா (வயது 66) என்ற சமூக ஆர்வலரும் இடம்பெற்றிருந்தார். இந்த குழுவின் அறிக்கையில் அதிருப்தி அடைந்த அவர், அந்த ஊழல்களுக்கு எதிராக கடந்த பிப்ரவரி 12-ந்தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வந்தார். தனது வீட்டுக்கு அருகே உள்ள ஒரு கோவிலுக்கு வெளியே இந்த போராட்டத்தை அவர் நடத்தினார்.

4 மாதங்களாக நடந்து வந்த இந்த உண்ணாவிரதத்தால் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. எனவே சமீபத்தில் அவர் மாவட்ட ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார். இது மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் செய்திகள்