< Back
தேசிய செய்திகள்
ஐஐடி விடுதியில் மாணவன் சடலமாக மீட்பு - அதிர்ச்சி சம்பவம்
தேசிய செய்திகள்

ஐஐடி விடுதியில் மாணவன் சடலமாக மீட்பு - அதிர்ச்சி சம்பவம்

தினத்தந்தி
|
10 Sept 2024 2:52 AM IST

ஐஐடி விடுதியில் மாணவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கவுகாத்தி,

அசாம் தலைநகர் கவுகாத்தில் இந்திய தொழில்நுட்ப கழகம் (ஐ.ஐ.டி.) உள்ளது. இங்கு உத்தரபிரதேசத்தை சேர்ந்த பிம்லேஷ் குமார் ( வயது 21) பிடெக் கம்யூட்டர் சைன்ஸ் 3ம் ஆண்டு கல்வி பயின்று வந்தார்.

இந்நிலையில், கல்லூரி விடுதியில் உள்ள அறையில் பிம்லேஷ் நேற்று பிணமாக மீட்கப்பட்டார். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் பிம்லேசின் உடலை மீட்பு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், பிம்லேஷ் தற்கொலை செய்துகொண்டாரா? , கொலை செய்யப்பட்டாரா? வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேவேளை, மாணவன் பிம்லேஷ் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கவுகாத்தி ஐ.ஐ.டி. விடுதியில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்