< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
அருணாச்சல பிரதேசத்தில் திடீர் நிலச்சரிவு
|25 April 2024 12:12 PM IST
தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க 3 நாட்கள் ஆகும் என அருணாச்சல பிரதேச மாநில அரசு கூறியுள்ளது.
இட்டாநகர்,
அருணாச்சல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட ஒரு பெரிய நிலச்சரிவால் தேசிய நெடுஞ்சாலையின் பெரும்பகுதி அடித்துச் செல்லப்பட்டது. இதனால் சீனாவின் எல்லையோர மாவட்டமான திபாங் பள்ளத்தாக்குடனான சாலை இணைப்பு துண்டிக்கப்பட்டது.
சாலையை சீரமைக்க 3 நாட்கள் ஆகும் என அருணாச்சல பிரதேச மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது. நிலச்சரிவு காரணமாக சீன எல்லையையொட்டிய இந்திய ராணுவ முகாம்களுக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலை துண்டிப்பால் தற்போது உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.