< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மும்பை குடிசைப் பகுதியில் பயங்கர தீ விபத்து.. வீடுகள், கடைகள் சாம்பல்
|17 Feb 2024 11:13 AM IST
பொதுமக்கள் பக்கெட்டுகளில் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மும்பை:
மும்பை புறநகர் கோவண்டியில் உள்ள ஆதர்ஷ் நகர் குடிசைப் பகுதியில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. வீடுகள் மற்றும் கடைகள் பற்றி எரிந்தன. வீடுகளில் இருந்த மக்கள் அலறியடித்து வெளியேறினர். பின்னர் பக்கெட்டுகளில் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் தீயணைப்பு வீரர்களும் வந்து தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த தீ விபத்தில் கடைகள், வீடுகள் என 15 கட்டிடங்கள் கருகி சாம்பலாகின. வயரிங் சாதனங்கள், சிமெண்ட் ஷீட்டுகள், பிளாஸ்டிக் ஷீட்டுகள், கேஸ் சிலிண்டர்கள், பர்னிச்சர்கள் என ஏராளமான பொருட்கள் கருகின.