< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கொரோனா பரவல் வேகமெடுத்தால், முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படும்: மராட்டிய துணை முதல் மந்திரி
|3 Jun 2022 7:37 AM IST
மராட்டியத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவலின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மும்பை,
மராட்டியத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்து வந்த நிலையில், தற்போது திடீரென அதிகரித்து வருகிறது. நேற்று முன் தினம் அங்கு 1081 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கடந்த பிப்ரவரி 24 க்கு பிறகு அதிகமாகும்.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில துணை முதல் மந்திரி அஜித் பவார், மராட்டியத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவது கவலையை அளிப்பதாக கூறினார். மேலும், தொற்று பரவல் அதிகரிக்கும் சூழலில், முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மாநிலத்தின் தற்போதைய கொரோனா நிலைமை குறித்து முதல் மந்திரியுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்