< Back
தேசிய செய்திகள்
குடகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம்
தேசிய செய்திகள்

குடகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம்

தினத்தந்தி
|
9 Sept 2023 12:15 AM IST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குடகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

குடகு-

குடகு மாவட்டம் மடிகேரியில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் மத்திய பா.ஜனதா அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தி விட்டதாகவும், பா.ஜனதா ஆட்சியில் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து விட்டதாகவும் கூறி கோஷம் எழுப்பினர்.

பின்னர் அவர்கள் கூறுகையில், கர்நாடக அரசின் அன்னபாக்ய திட்டத்துடன் மத்திய அரசு நிர்ணய விலையில் 5 கிலோ அரிசி வழங்க வேண்டும். மின்சார துறையை தனியார் மயமாக்கக்கூடாது, ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்துவதை நிறுத்த வேண்டும். மாநிலங்களுக்கு வரி பங்கீடு வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதை நிறுத்த வேண்டும்.

அத்தியாவசிய பொருட்கள், மருந்துகளின் விலையை கட்டுப்படுத்த வேண்டும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். குடகில் வனவிலங்கு அச்சுறுத்தல் அதிகமாக உள்ளது. அதனை நிரந்தரமாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

பின்னர் அவர்கள் தங்கள் கோரிக்கை அடங்கிய மனுவை கலெக்டரை சந்தித்து கொடுத்தனர்.

மேலும் செய்திகள்