< Back
தேசிய செய்திகள்
லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குவதாக கூறி  பெண்களை ஏமாற்றி மோசடி செய்த இன்ஜினியர்...!  சிலர் கர்ப்பம் என புகார்
தேசிய செய்திகள்

லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குவதாக கூறி பெண்களை ஏமாற்றி மோசடி செய்த இன்ஜினியர்...! சிலர் கர்ப்பம் என புகார்

தினத்தந்தி
|
15 July 2022 9:29 AM IST

2 மாநிலங்களில் 8 பெண்களை ஏமாற்றி மோசடி செய்த இன்ஜினியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் புகார் கூறியுள்ளனர்.

ஐதரபாத்,

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில், எட்டு பெண்களை திருமணம் செய்து மோசடி செய்தவருக்கு போலீசார் ஆதரவாக செயல்படுவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.இதுகுறித்து, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த எட்டு பெண்கள் ஹைதராபாதில் கூறியதாவது:

ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் சிவசங்கர் பாபு.

பிரபல 'சாப்ட்வேர்' நிறுவனத்தில் வேலை செய்வதாகவும் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குவதாகவும் திருமண இணையதளத்தில் விளம்பரம் செய்திருந்தார். விவாகரத்து பெற்ற, வசதி படைத்த பெண்களை மட்டுமே தொடர்பு கொண்டு பேசினார். அவர் கூறுவதை உண்மை என நம்பிய நாங்கள், அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டோம்.திருமணம் செய்து கொண்ட சில மாதங்களிலேயே எங்களிடமிருந்த விலை உயர்ந்த நகை, பணத்தை எடுத்துக் கொண்டு தலைமறைவாகி விட்டார். இதுவரை எட்டு பேர் ஏமாந்துள்ளோம்.

அதில் சிலர் கர்ப்பமாக இருக்கின்றனர். இது குறித்து தெலுங்கானா மற்றும் ஆந்திர காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், போலீசார் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் பல பெண்களை சிவசங்கர் பாபு ஏமாற்றாமல் இருக்க, அவரை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்