< Back
தேசிய செய்திகள்
மராட்டியம்:  சிறுமி பலாத்காரம்; சிகரெட்டால் சுட்டு, முடியை வெட்டி கொடூரம்
தேசிய செய்திகள்

மராட்டியம்: சிறுமி பலாத்காரம்; சிகரெட்டால் சுட்டு, முடியை வெட்டி கொடூரம்

தினத்தந்தி
|
21 Nov 2023 9:33 PM IST

மராட்டிய துணை முதல்-மந்திரி பட்னாவிஸ், குற்றவாளிகள் தப்ப முடியாது. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது என்று கூறினார்.

அகோலா,

மராட்டியத்தின் அகோலா நகரில் 14 வயது சிறுமியை கணேஷ் கும்ரே (வயது 29) என்பவர் 2 ஆண்டுகளாக துரத்தி, துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 15 மற்றும் 16 ஆகிய நாட்களில் சிறுமியை கும்ரே பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.

இதன்பின்னர், சிறுமியை சிகரெட்டால் சுட்டு கொடுமைப்படுத்தி உள்ளார். முடியையும் வெட்டி விட்டுள்ளார். இதுபற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்டு, எப்.ஐ.ஆர். பதிவானது.

மராட்டியத்தின் உள்துறை பதவி வகித்து வரும் துணை முதல்-மந்திரி பட்னாவிஸ், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறியுள்ளார்.

இதுபற்றி நாக்பூரில் அவர் பேசும்போது, குற்றவாளிகள் தப்ப முடியாது. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது என்று கூறினார்.

இந்த சம்பவம் பற்றி உள்ளூர் மக்கள் போலீசை அணுகி புகார் தெரிவித்தனர். அந்த நபருக்கு இன்று வரை போலீஸ் காவல் விதிக்கப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்