< Back
தேசிய செய்திகள்
மராட்டியம்:  ஆலையில் வெடிவிபத்து; 4 பேர் பலி
தேசிய செய்திகள்

மராட்டியம்: ஆலையில் வெடிவிபத்து; 4 பேர் பலி

தினத்தந்தி
|
4 Nov 2023 8:23 AM IST

தொடர்ந்து, தேசிய பேரிடர் நிவாரண படையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராய்காட்,

மராட்டியத்தின் ராய்காட் மாவட்டத்தில் மகத் பகுதியில் மருந்து தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் ஆலையில் தீ பரவியது.

இதனால், ரசாயன பொருட்கள் மற்றும் வெடிக்க கூடிய பொருட்களிலும் தீ பற்றி கொண்டது. இந்த சம்பவத்தில் 7 பேர் காயமடைந்தனர். 11 பேரை காணவில்லை என முதல் கட்ட தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து, தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் நடந்தன. தீயணைப்பு வாகனங்களும் உடனடியாக சென்றன.

இந்நிலையில், ஆலையில் இருந்து நேற்றிரவு 3 உடல்கள் மீட்கப்பட்டன. தொடர்ந்து, தேசிய பேரிடர் நிவாரண படையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை நடந்த மீட்பு பணியில் மற்றொரு நபரின் உடல் மீட்கப்பட்டது. இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்து உள்ளது.

மேலும் செய்திகள்