< Back
தேசிய செய்திகள்

தேசிய செய்திகள்
மராட்டியம்: பஸ்-லாரி மோதல்; 12 பேர் பலி

8 Oct 2022 8:24 AM IST
மராட்டியத்தில் பயணிகள் பஸ் விபத்தில் சிக்கி, தீப்பிடித்து எரிந்ததில் 12 பேர் உயிரிழந்தனர்.
நாசிக்,
மராட்டியத்தில் நாசிக் நகரில் அவுரங்காபாத் சாலையில் பயணிகளை ஏற்றி கொண்டு சென்ற பஸ் ஒன்று இன்று அதிகாலை 5 மணியளவில் லாரி மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில், பலர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தில் பஸ் தீப்பிடித்து கொண்டது. தீ மளமளவென பஸ் முழுவதும் பற்றி எரிய தொடங்கியது. இதனால், பஸ்சுக்குள் சிக்கி கொண்ட பயணிகள் வெளியே வர முடியாமல் பரிதவித்தனர்.
இந்த விபத்தில் மற்றும் தீயில் சிக்கி 12 பயணிகள் உயிரிழந்து உள்ளனர். 30 பேர் வரை காயமடைந்து உள்ளனர்.
பஸ் தீ பிடித்து எரிந்தது பற்றிய தகவல் அறிந்ததும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.