< Back
தேசிய செய்திகள்
மராட்டிய துணை முதல் மந்திரி அஜித் பவாருக்கு கொரோனா தொற்று உறுதி

கோப்புப்படம் ANI

தேசிய செய்திகள்

மராட்டிய துணை முதல் மந்திரி அஜித் பவாருக்கு கொரோனா தொற்று உறுதி

தினத்தந்தி
|
27 Jun 2022 6:31 PM IST

மராட்டிய துணை முதல் மந்திரி அஜித் பவாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், துணை முதல் மந்திரி அஜித் பவாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபரில் முதல் முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட அஜித் பவாருக்கு தற்போது இரண்டாவது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த வாரம், முதல் மந்திரி உத்தவ் தாக்கரே மற்றும் கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி ஆகியோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை கோஷ்யாரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் பவார் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "கொரோனா பரிசோதனை செய்ததில் எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் நன்றாக இருக்கிறேன், மருத்துவர்களிடம் ஆலோசனை செய்து வருகிறேன்.

உங்கள் ஆசீர்வாதத்துடன், விரைவில் நான் கொரோனாவை தோற்கடித்து, உங்கள் சேவையை மீண்டும் தொடங்குவேன். என்னுடைய தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள்" என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்