< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
டிராக்டர் ஓட்டிய மராட்டிய முதல்-மந்திரி... மும்பை ஜுஹு கடற்கரையில் விழிப்புணர்வு
|10 Dec 2023 5:05 AM IST
கடற்கரையை தூய்மையாக வைத்துக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
மும்பை,
மராட்டிய மாநிலம் மும்பையிலுள்ள புகழ்பெற்ற ஜுஹு கடற்கரையில் தூய்மைப் பணிகளை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தொடங்கி வைத்தார்.
கடற்கரையை தூய்மையாக வைத்துக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. முன்னதாக, கடற்கரையில் இருந்த மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, அந்த இடத்தை தண்ணீரை கொண்டு சுத்தம் செய்தார்.
பின்னர் கடற்கரை பகுதியில் டிராக்டரை இயக்கினார். இதனை பொதுமக்கள் மற்றும் ஆதரவாளர்கள், தங்கள் செல்போனில் படம்பிடித்தனர்.