< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மாநிலங்களவையில் மன்மோகன் சிங் கடைசி வரிசைக்கு மாற்றம் - சக்கர நாற்காலியை பயன்படுத்துவதற்காக நடவடிக்கை
|3 Feb 2023 4:37 AM IST
சக்கர நாற்காலியை பயன்படுத்துவதற்கு வசதியாக, மன்மோகன் சிங்குக்கு கடைசி வரிசையில் இருக்கை மாற்றப்பட்டு இருக்கிறது.
புதுடெல்லி,
முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான மன்மோகன் சிங் (வயது 90) மாநிலங்களவை உறுப்பினர் ஆவார். இவருக்கு அவையில் முதல் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால் வயது மூப்பு காரணமாக அவர் சக்கர நாற்காலியை பயன்படுத்தி வருகிறார்.
எனவே அவைக்குள் இந்த நாற்காலியை பயன்படுத்துவதற்கு வசதியாக, மன்மோகன் சிங்குக்கு கடைசி வரிசையில் இருக்கை மாற்றப்பட்டு இருக்கிறது. அவருக்கு பதிலாக கட்சியின் மூத்த தலைவர்களான ப.சிதம்பரம், திக்விஜய் சிங் ஆகியோருக்கு முன்வரிசையில் இடம் அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்த இருக்கை மாற்ற நடவடிக்கையை காங்கிரஸ் கட்சி மேற்கொண்டு உள்ளது.