< Back
தேசிய செய்திகள்
முடிவுக்கு வரும் 33 ஆண்டுகால பயணம்: இன்றுடன் ஓய்வு பெறுகிறார் மன்மோகன் சிங்

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

முடிவுக்கு வரும் 33 ஆண்டுகால பயணம்: இன்றுடன் ஓய்வு பெறுகிறார் மன்மோகன் சிங்

தினத்தந்தி
|
3 April 2024 2:11 AM IST

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் 9 மத்திய மந்திரிகள் உள்பட 54 எம்.பி.க்களின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது

புதுடெல்லி,

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், 33 ஆண்டுகளாக நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இந்திய பொருளாதாரத்தில் பல துணிச்சலான சீர்திருத்த நடவடிக்கைகளை ஏற்படுத்தியதற்காக அறியப்பட்ட மன்மோகன்சிங், 1991 அக்டோபரில் முதல்முறையாக எம்.பி. ஆனார். நரசிம்மராவ் அரசாங்கத்தில் 1991-96 வரை நிதி அமைச்சராகவும், 2004 முதல் 2014 வரை பிரதமராகவும் இருந்தார்.

91 வயதாகும் மன்மோகன்சிங், இன்று (புதன்கிழமை) தனது பதவி காலத்தை நிறைவு செய்து ஓய்வு பெறுகிறார். அதன்பிறகு காலியாக இருக்கும் இடத்தை நிரப்புவதற்காக சோனியா காந்தி ராஜஸ்தானில் இருந்து முதல்முறையாக மேல்சபைக்கு தேர்வு பெற்றார்.

இதேபோல கல்வி மந்திரி தர்மேந்திரபிரதான், தகவல் ஒலிபரப்புதுறை மந்திரி எல்.முருகன், சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா உள்ளிட்ட 7 மத்திய மந்திரிகளின் பதவி காலமும் செவ்வாய் மற்றும் புதன்கிழமையுடன் முடிவடைகிறது.

இவர்களில் மத்திய மந்திரி வைஷ்ணவை தவிர மற்ற அனைவரும் மீண்டும் மக்களவை தேர்தலில் போட்டியிடுகிறார்கள். எனவே அவர்களின் பொறுப்புகளில் இருந்து விடுவி்க்கப்பட்டு உள்ளனர்.

மேலும் 49 எம்.பி.க்கள் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது ஓய்வு பெற்றனர். மேலும் 5 பேர் இன்று ஓய்வு பெறுகின்றனர்.

மேலும் செய்திகள்