மணிப்பூர் வன்முறை: ராணுவம் குவிப்பு; 8 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு, பிரதமர் மோடியிடம் உதவி கோரும் மேரி கோம்
|மணிப்பூர் வன்முறை ராணும் குவிப்பு; 8 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு, மொபைல் இணைப்பு துண்டிப்பு பிரதமர் மோடியிடம் மேரி கோம் உதவி கோரினார்.
இம்பாலா
மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினரின் போராட்டத்தில் மணிப்பூரில் வன்முறை வெடித்தது. மெய்டேய் சமூகத்தை பட்டியலிடப்பட்ட பழங்குடி (எஸ்டி) பிரிவில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்த்து மாணவர்கள் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட பழங்குடியினர் ஒற்றுமை ஊர்வலத்தின் போது வன்முறை வெடித்தது.
டோர்பாங் பகுதியில் பழங்குடியினர் மற்றும் பழங்குடியினர் அல்லாதோர் இடையே வன்முறை நடந்துள்ளது.
இதை தொடர்ந்து மணிப்பூரின் எட்டு மாவட்டங்களில் புதன்கிழமை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மற்றும் முழு வடகிழக்கு மாநிலத்திலும் மொபைல் சேவைகள் சேவைகள் நிறுத்தப்பட்டன.நிலைமை பதற்றமாகவே உள்ளது.
பழங்குடியினர் ஆதிக்கம் இல்லாத இம்பால் மேற்கு, கக்சிங், தவுபால், ஜிரிபாம் மற்றும் பிஷ்ணுபூர் மாவட்டங்களிலும், பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் சுராசந்த்பூர், காங்போக்பி மற்றும் தெங்னௌபால் மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் மொபைல்-இன்டர்நெட் சேவைகள் ஐந்து நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன
நிலைமையைக் கட்டுப்படுத்த ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் ஆகியவை நிறுத்தப்பட்டுள்ளது.
வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 4,000 பேர் பாதுகாப்புப் படையினரால் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
மணிப்பூரில் நடந்த வன்முறையை தொடர்ந்து இந்தியப் பெகுத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், பிரதமர் மோடியிடம் உதவி கோரினார்.
"எனது மாநிலமான மணிப்பூர் எரிகிறது. தயவுசெய்து உதவுங்கள்" என்று டுவீட் செய்துள்ளார். இந்த டுவீட்டில், பிரதமர் நரேந்திர மோடி, பிரதமர் அலுவலகம், மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா மற்றும் பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோரைக் டேக் செய்து மணிப்பூரில் நடந்த வன்முறை படங்களைப் பகிர்ந்துள்ளார்.
உள்துறை மந்திரி அமித் ஷா, மணிப்பூர் வன்முறை தொடர்பாக அம்மாநில முதல் மந்திரி பிரேன் சிங்குடன் தொலைபேசியில் பேசி நிலைமையை ஆய்வு செய்தார். மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உள்துறை மந்திரி உறுதியளித்துள்ளார்.