< Back
தேசிய செய்திகள்
மணிப்பூர்:  விமான நிலையத்தில் ஆளில்லா விமானம் ஏற்படுத்திய பரபரப்பு
தேசிய செய்திகள்

மணிப்பூர்: விமான நிலையத்தில் ஆளில்லா விமானம் ஏற்படுத்திய பரபரப்பு

தினத்தந்தி
|
19 Nov 2023 9:28 PM IST

இம்பால் விமான நிலையத்தின் வான்வெளி கட்டுப்பாடு முழுவதும் இந்திய விமான படையிடம் ஒப்படைக்கப்பட்டது.

இம்பால்,

மணிப்பூரின் இம்பால் நகரில் உள்ள இம்பால் விமான நிலையத்தின் மீது இன்று ஆளில்லா விமானம் ஒன்று பறந்து சென்றுள்ளது. இதுபற்றிய தகவல் அறிந்ததும், வான்வெளி பரப்பை அதிகாரிகள் உடனடியாக மூடும்படி உத்தரவிட்டனர். இதனால், 3 விமானங்கள் புறப்படுவதில் காலதாமதம் ஏற்பட்டது.

இம்பால் விமான நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்த 2 விமானங்கள் கொல்கத்தா மற்றும் கவுகாத்தியை நோக்கி திருப்பி விடப்பட்டன. இதனால், ஆயிரம் பயணிகள் வரை பாதிக்கப்பட்டனர் என விமான நிலையத்தின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனை தொடர்ந்து, வான்வெளி கட்டுப்பாடு முழுவதும் இந்திய விமான படையிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் அனுமதி அளித்த பின்னரே வர்த்த விமான இயக்கங்கள் மீண்டும் நடைபெற தொடங்கின. அந்த பெரிய ஆளில்லா விமானம் ஒரு மணிநேரம் வரை பறந்தது என விமான நிலையத்தில் இருந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

மேலும் செய்திகள்